கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு சிக்கல்? – DNA வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

0
7

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு எதிரான பிதிர்த்துவ வழக்கில் மரபணு பரிசோதனைக்கான இரத்த மாதிரியைப் பெற விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, கொழும்பு சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மரபணு பரிசோதனையை நியாயப்படுத்துவதற்குப் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி மாவட்ட நீதிமன்றம் முன்னதாக இந்த மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது.

ரசிகா செவ்வந்தி என்பவரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் தாம் சாமிக்க கருணாரத்னவுடன் காதலில் இருந்ததாகவும், தான் கர்ப்பமடைந்த பின்னர் அவர் பிதிர்த்துவத்தை ஏற்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், தனது குழந்தைக்குச் சாமிக்க கருணாரத்னவை தந்தையாக அறிவித்து, பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு அவர் மனுவில் கோரியுள்ளார்.

எனினும், இக்ககுற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக மறுத்து வரும் சாமிக்க கருணாரத்ன, மரபணு பரிசோதனை செய்துகொள்வதையும் எதிர்த்து வருகிறார்.”

இந்த நிலையில், மாவட்ட நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனு, வழக்கின் அடுத்தகட்ட நகர்வில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here