சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (30) ,இது பற்றி காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் பெற்றோர்கள் தினம் தினம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்து வருகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நிரந்தர தீர்வையும் நேர்மையான தீர்வையும் காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழு மூலம் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்
என காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் எதிர்பார்க்கும் அவா.
இழந்தவர்களுக்கு எவ்வித தீர்வையும் ஆற்றுப்பாடுத்துவது மிகவும் கடினமான சூழ்நிலை ஆகும். இந்த சூழ்நிலையில் அவர்களை ஆற்றுப்படுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆணைக்குழு ஊடக நீதியான தீர்வை பெற்று கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு மன சாந்தியை ஏற்படுத்தி கொடுக்கலாம் என்பது தமிழ் மக்களின் ஆதங்கம் ஆகும்.
அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதன் மூலம் அதற்கான தீர்வையும் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரில் தாய்மார்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவே காணமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழு ஊடாக அதற்கான தீர்வை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என சர்வதேச இந்து மதப் படத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

