கோதுமை மாவின் விலை உயர்வு – வெளியான அறிவிப்பு!

0
6

நாட்டில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரீமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய முன்னணி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று (29) முதல் உடனடியாக அமுலுக்கு வருவதாக அந்தநிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இந்த திடீர் விலை உயர்வு காரணமாக பாண் மற்றும் பிற வெதுப்பக பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here