ஐசிசி கிரிக்கெட் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரணடாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளின் படி நிலை 1 குற்றத்தைச் செய்ததற்காக இரு வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டி கட்டண அபராதத்துடன் சேர்த்து, இரு வீரர்களின் கணக்கிலும் தலா ஒரு தகுதிக்குறைப்பு புள்ளி (Demerit Point) சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது.
மைதானத்தில் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதற்காக ஐசிசி இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையை எடுத்துள்ளது.
