!
சர்வதேச எரிசக்தி முகமையின் மூலோபாய எண்ணெய் இருப்பை இரண்டாவது முறையாக சந்தையில் வெளியிடுவது குறித்து தற்போது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அதன் தலைவர் ஃபாத்தி பிரோல் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
சந்தையின் நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், கடந்த மார்ச் மாதம் 400 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வெளியிடப்பட்ட பிறகும், 80 சதவீத மூலோபாய இருப்பு பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாதத்தில் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான அரசு எண்ணெய் இருப்பு வெளியீட்டை IEA அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

