ஐபிஎல் தொடரில் 5 முறை செம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, தங்கள் அணியின் புதிய செயல்திறன் இயக்குநராக சுபின் பருச்சாவை நியமித்துள்ளது.
56 வயதான முன்னாள் முதல்தரக் கிரிக்கெட் வீரரான பருச்சா, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநராக செயற்பட்டு, சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் போன்ற பல இளம் வீரர்களை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜயவர்தனவுடன் இணைந்து இவர் பணியாற்றவுள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிண்ணம் வெல்ல முடியாமல் தவித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, மீண்டும் கிண்ணத்தைக் கைப்பற்ற உதவும் நோக்கில் இவருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
