இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன நியமனம்!

0
3

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் நட்சத்திர வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்த நியமனம் 2026 ஆகஸ்ட் 20 முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், 2027 டிசம்பர் 31 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தேசிய உயர் செயல்திறன் மையத்தில் தங்கியிருந்து தேசிய அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

1996 உலகக் கிண்ணம் வென்ற அணியின் உறுப்பினரான இவர், முன்னர் இலங்கை ஆண்கள் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராகவும், இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகளின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1989 முதல் 2003 வரை இலங்கைகாக 83 தேர்வுப் போட்டிகள் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, சர்வதேச அளவில் 8,200 க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here