பாலஸ்தீன வாகனங்கள் மீது இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல்!

0
2

ரமல்லாவின் வடகிழக்கே உள்ள அல்-முகையீர் கிராமத்தின் வெளிப்பகுதியில் பாலஸ்தீனியர்களின் வாகனங்கள் மீது இஸ்ரேலிய சட்டவிரோத குடியேற்றவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ‘வஃபா’செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அல்-முகையீர் கிராமத்தின் மேற்கே உள்ள ‘சாஹ்ல் சிஆ’ பகுதியில் பயணித்த உள்ளூர்வாசிகளின் வாகனங்கள் மீது குடியேற்றவாசிகள் சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.

தாக்குதல் நடைபெற்ற அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தினர் கிராமத்தின் பிரதான நுழைவாயிலை மூடி, பொதுமக்கள் உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தற்காலிகத் தடை விதித்தனர்.

மேற்குக்கரையில் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான குடியேற்றவாசிகளின் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here