இலங்கையில் பாசஞ்சர் ட்ரோன் (Passenger Drone) சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
சீனாவின் பிரபல தன்னாட்சி வான்வழி வாகன நிறுவனமான ‘EHang’, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு இதுகுறித்த விளக்கமளிப்பை வழங்கியுள்ளது.
இச்சேவை சுற்றுலாத்துறை, அவசரகால மீட்புப் பணிகள் மற்றும் கடல்சார் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
EHang நிறுவனத்தின் 2 பயணிகள் பயணிக்கும் eVTOL ட்ரோன், 16 புரொப்பல்லர்கள் மற்றும் AI தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு ஹோட்டல் ஒன்றுக்கான பயணக் கட்டணம் தோராயமாக 20 முதல் 30 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சீகிரியா, பிதுரங்கல மற்றும் கொழும்பு போர்ட் சிட்டி (Port City) ஆகிய பகுதிகளில் இச்சேவையை இயக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் முறையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற்ற பிறகே இத்திட்டம் செயற்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

