ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விஸ்வநாதன் & சன்ஸ் திரைப்படத்திற்கு, ஆன்லைன் முன்பதிவில் மிகத் தீவிரமாக டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
இன்று ரிலீஸாகியுள்ள நிலையில், தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
பிரபல நடிகர் சூர்யா நடிக்கும் , இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
தயாரிப்பு நிறுவனமான ‘ரவிந்தர் சந்திரசேகரன் – லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள “விஸ்வநாதன் & சன்ஸ்” திரைப்படத்திற்கு, ஆன்லைன் முன்பதிவில் தீவிரமான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது
விஸ்வநாதன் & சன்ஸ் படம் இன்று திரைக்கு வந்துள்ள சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,72,230 (172.23K) டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு டிக்கெட்டின் சராசரி விலையாக ₹150 கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ஆன்லைன் தளத்தில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் தோராயமாக ₹2.5 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது.

