உலகிலேயே சிறுமிகள் உயர்நிலைப் பள்ளி மற்றும் உயர்கல்வி கற்பதற்கு அதிகாரப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள ஒரே நாடாக ஆஃப்கானிஸ்தான் உள்ளது.
பிபிசிக்கு யுனிசெஃப் வழங்கிய தரவுகளின்படி, ஆஃப்கானிஸ்தானில் சுமார் 26 லட்சம் சிறுமிகளால் 6 ஆம் வகுப்பிற்கு மேல் பாடசாலைக்கு செல்ல முடியவில்லை.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் சிறுமிகள் உயர்நிலைப் பள்ளி வயதை அடைகின்றனர்.
2030 ஆம் ஆண்டிற்குள், 6 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட கல்வி மறுக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 40 லட்சத்திற்கும் அதிகமாக உயரும்.
இந்தநிலை நீடித்தால், 2030 ஆம் ஆண்டிற்குள் ஆஃப்கானிஸ்தான் சுமார் 20,000 பெண் ஆசிரியர்களையும், 5,400 பெண் சுகாதாரப் பணியாளர்களையும் இழக்க நேரிடும்.
2035 ஆம் ஆண்டிற்குள், அந்நாடு இழக்கும் பெண் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை 9,600 ஆக அதிகரிக்கும்.

