ரஷ்யக் குடியரசின் டாடர்ஸ்தான் பிராந்தியத்தில் அமைந்துள்ள நிஷ்னெகம்ஸ்க் (Nizhnekamsk) நகரின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 75 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 1,100 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ள இந்நகரத்தின் மீது, இரவு தொடக்கம் காலை வரை பல மணி நேரம் இந்தத் தாக்குதல் தொடர்ந்து நீடித்துள்ளது.
ரஷ்யாவின் முக்கிய ‘தானேவோ’ (Tanevo) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.

