ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அந்நாட்டிற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நடவடிக்கைகளைத் தாம் சாதாரணமாகக் கையாளுவதாகத் தெரிவித்த அவர், அந்நாட்டில் நிலவும் கடுமையான பணவீக்கம் மற்றும் அவர்களிடம் பணம் இல்லாத சூழ்நிலையை அமெரிக்கா தீவிரமாகக் கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போர் தொடங்கியதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், உலகளவில் எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து சர்வதேசப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது.
இருப்பினும், அமெரிக்க நுகர்வோர் இந்தப் போரினால் பெரியளவில் சிரமத்தை எதிர்நோக்கும் அளவிற்குத் தங்களது நாட்டில் எண்ணெய் விலைகள் உயர்த்தப்படவில்லை என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

