இத்தாலி தலைநகர் ரோமில் இடம்பெற்று வந்த இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான அண்மையக பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் பின்னணியில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இந்த பேச்சுவார்த்தைகள் மூன்று நாட்களாக நடைபெற்று வந்தன.
முன்னதாக வாஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாக இடம்பெற்ற ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

