ஹவுதியின் புதிய வியூகத்தால் உலுக்கியெடுக்கும் யேமன்!

0
2

யேமன் தலைநகர் சனாவிலிருந்து பெறப்படும் செய்திகளின்படி, சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கத்தைக் இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையிலான தனித்துவமான தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு, தெற்கு பிரிவினைவாதிகளுடனான மோதலுக்குப் பின்னர், யேமன் அரசாங்கத்தால் ‘யேமன் அவசரகாலப் படை’ உருவாக்கப்பட்டது.

தெற்கு இடைக்கால பேரவையின் (STC) கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளைக் கைப்பற்றி அமைக்கப்பட்ட இந்தப் படையில், ஆறு பிரிவுகளின் கீழ் சுமார் 30,000 வீரர்கள் உள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இராணுவ முகாமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

செங்கடலில் சவூதி கப்பல்களை இலக்கு வைப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், தரைப்படை தளத்தில் உள்ள சவூதி அரேபியாவின் நட்புப் படைகளையும் இலக்கு வைத்து ஹவுதிகள் தங்களது தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here