தெற்கு லெபனானில் தீவிரமடையும் மோதல்!

0
2

தெற்கு லெபனானின் திப்னின் நகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அப்பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்த சில நேரங்களிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், அதற்கு முன்னர் அல்-மன்சூரி கிராம மக்களுக்கு கட்டாய வெளியேற்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், கஃபார்ஷூபா எல்லைப் பகுதிகளிலுள்ள காடுகளுக்கு இஸ்ரேலியப் படைகள் திட்டமிட்டு தீ வைத்துள்ளதாகவும், திப்னின் பகுதியில் வெடிக்காத இஸ்ரேலிய வெடிபொருட்கள் வெடித்ததில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் NNA மேலும் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here