ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஆதிக்கம் செலுத்த முயற்சி

0
6

ஈரான், ஹோர்முஸ் நீரிணையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்வதாகவும், இது சர்வதேச கடல்சார் சட்டத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, வளைகுடா அரபு நாடுகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பதாகவும் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணை என்பது அனைத்து வர்த்தகக் கப்பல்களும் சுதந்திரமாகப் பயணிக்கக்கூடிய ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இந்த நடவடிக்கை, கடல்களின் சுதந்திரம் தொடர்பான அமெரிக்காவின் அடிப்படைக் கோட்பாட்டை மீறுவதாகவும், வளைகுடா அரபு நாடுகள் தங்களின் விதியை தெஹ்ரானின் கைகளில் ஒப்படைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் ஜோன் போல்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here