2026 காமன்வெல்த் போட்டிகள்: ஜூடோவில் இந்தியாவின் முதல் தங்கம்… வரலாற்று சாதனை படைத்த அஷ்மிதா டே!

0
6

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் போட்டிகள் தொடரில், ஜூடோ பிரிவில் இந்திய வீராங்கனை அஷ்மிதா டே தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றிலேயே ஜூடோவில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். நடப்பாண்டு தொடரில் இந்திய அணி வென்ற 4வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில், கனடாவின் ஹெய்டி குவாச்சை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து வெற்றிப்பெற்றார்.

திரிபுரா மாநிலத்தின் பெலோனியா என்ற பகுதியைச் சேர்ந்த அஷ்மிதாவின் தந்தை ஒரு சைக்கிள் மெக்கானிக் ஆவார். நிதி நெருக்கடிகளையும் தாண்டி இந்த இமாலய சாதனையை அவர் எட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here