பாலஸ்தீனப் பள்ளி மற்றும் வீடுகளை இடிக்க இஸ்ரேல் நீதிமன்றம் அனுமதி!

0
6

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் தெற்கே ஹெபிரான் அருகே உள்ள மசாஃபர் யட்டா பகுதியில் ஒரு பள்ளி மற்றும் மூன்று வீடுகளை இடிக்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களை இஸ்ரேலிய ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் இடிப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள இடைநிலைப் பெண்கள் பள்ளியை இடிக்கும் ராணுவ உத்தரவுக்கு எதிரான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மசாஃபர் யட்டா பகுதியில் பாலஸ்தீனக் குடிமக்களுக்குச் சொந்தமான வீடுகளை இடிப்பதைத் நிறுத்தக் கோரிய மூன்று தனித்தனி மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்பின் மூலம் இஸ்ரேலிய படைகள் எப்போது வேண்டுமானாலும் இந்த இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here