பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (TVTC) 8 பாடநெறிகளுக்காக 153 புதிய பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (26.07.2026) சிறப்பாக நடைபெற்றது.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதியமைச்சர் கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அத்துடன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் கலைச்செல்வி அவர்களும் இதில் சிறப்பு விருந்தினராகப் பங்குபற்றினார்.

இப்பயிற்சி நெறிகளில் இணையும் மாணவர்களுக்கான 6 மாத கால பயிற்சி, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே முழுமையாக ஏற்று நிதியொதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மலையக இளைஞர், யுவதிகளின் தொழிற்திறனை மேம்படுத்தி, அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு கனவுகளை நனவாக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


