பிரபல நடிகர் சூர்யா பாடிய ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

0
5

வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘தி வெடிங் சாங்’ லிரிக் வீடியோ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை, நடிகர் சூர்யாவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கென் கருணாஸ் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல், ஒரு குடும்பத் திருமண விழாவின் கொண்டாட்டங்களை மையமாகக் கொண்டு துள்ளலான இசையுடன் பின்னப்பட்டுள்ளது. “மேளம் கொட்ட தாளி கட்ட பையன் பொண்ணு ஒன்னாக… சிரிப்பே மாறாம நீ பார்த்துக்கணும் கண்ணாக” என்ற வரிகள் மூலம் புதுமணத் தம்பதிகளுக்கான வாழ்த்துகளையும், வாழ்வியல் கருத்துகளையும் கொண்டாடும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here