ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு கூட்டம் எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, முஜிபுர் ரஹ்மான், எஸ். எம். மரிக்கார், சித்ரால் பெர்னாண்டோ மற்றும் ரோஹண பண்டார உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டதுடன், கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தனர்.
எனினும், கூட்டம் நிறைவடைந்ததும் அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவரிடம் கேள்விகளை எழுப்ப முயன்றபோதிலும், அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

