இலஞ்சம் பெற்ற முல்லேரியா பிரதேச சபையின் வருமான பரிசோதகர் கைது

0
5

இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் உப அலுவலகத்தில் பணிபுரியும் வருமான பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் 2018 ஆம் ஆண்டு கொள்முதல் செய்து இதுவரை வசித்து வரும் வீட்டிற்கு முல்லேரியா பிரதேச சபை அதிகாரிகள் வருகை தந்து, வீட்டின் மேல் தளத்திற்கும் கீழ் தளத்திற்கும் தனித்தனியாக வரி செலுத்துமாறு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, முறைப்பாட்டாளர் அந்த அதிகாரிகள் கோரிய ஆவணங்களைத் தயாரித்து ஒப்படைத்துள்ளார்

பின்னர், முல்லேரியாவ பிரதேச சபையின் வருமான பரிசோதகர் வீட்டிற்கு வந்து பரிசோதித்து விட்டு, வீட்டின் வரைபடம் மற்றும் மதிப்பீட்டில் பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதனைப் பிரச்சினையில்லாதவாறு சரிசெய்து, முறைப்பாட்டாளரின் பெயரிலேயே வரியைச் செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக லஞ்சமாக 25,000 ரூபாய் பணத்தைக் கோரியுள்ளார்.

அதன்படி, அந்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (22) கொழும்பு தலைமை நீீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here