இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 88% பேருக்கு டெங்கு 2 (DENV-2) வைரஸ் திரிபு பாதித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு தொற்று நிலைமை காரணமாக இதுவரை இலங்கையில் 75,321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
டெங்கு 2 வைரஸ் திரிபுக்கு எதிராக மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பதிவாகியுள்ள அந்த 53 டெங்கு மரணங்களில் 37 பேர் பெண்கள் என்றும் வைத்தியர் கன்னங்கர மேலும் குறிப்பிட்டார்.

