நடப்பாண்டில் இதுவரை 18 துப்பாக்கிச்சூடு – 13 பேர் உயிரிழப்பு

0
4

நடப்பாண்டில் இதுவரை நாட்டில் 18 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குகின்றன.

இந்த ஆண்டில் பதிவான மொத்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here