முறையற்ற நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி வனவிலங்கு திணைக்களத்தினர் தொழிற்சங்கப் போராட்டம்!

0
6

சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துக்குள் உள்வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் திங்கட்கிழமை (13) சுகயீன விடுமுறையை பதிவு செய்து நாடு தழுவிய ரீதியில் திடீர் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு கட்டமாக பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனவிலங்கு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (13) முன்னெடுக்கப்பட்ட பாரிய எதிர்ப்பு போராட்டத்தின் போது அகில இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இந்திக்க பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here