‘ஹானர்ஸ் போர்டில்’ எனது பெயர் இடம்பெற்றிருப்பதை நம்பவே முடியவில்லை – யாஸ்திகா பாட்டியா

0
12

கிரிக்கெட்டின் தாயகமாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிப்பது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்நாள் கனவு என்று யாஸ்திகா பாட்டியா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை யாஸ்திகா பாட்டியா, லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தின் புகழ்பெற்ற ‘ஹானர்ஸ் போர்டில்’ தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். இந்த வரலாற்று சாதனை குறித்து மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்து அவர்…

கிரிக்கெட்டின் தாயகமாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிப்பது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்நாள் கனவு. அதிலும் இந்த மைதானத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஹானர்ஸ் போர்டில்’ எனது பெயர் இடம்பெற்றிருப்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான தசைநார்காயம் காரணமாக கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் என்னால் விளையாட முடியாமல் போனது. அதிலிருந்து மீண்டு வந்து இந்த சாதனையை படைத்தது மிகவும் உணர்ச்சிகரமான ஒன்றாக உள்ளது. இதற்காக எனக்கு ஆதரவளித்த அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் எனது நன்றிகள் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here