தற்போதைய டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு, பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சு முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
இதன்படி, மாணவர்கள் தங்களை டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, பாடசாலை சீருடையுடன் சேர்த்து கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையிலான பொருத்தமான மேலதிக ஆடைகளை அணிவதற்கு அனுமதி வழங்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

