அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது: எதிர்க்கட்சித் தலைவர்

0
7

முந்தைய அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் மக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறி, நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்த்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டின் தூண்களாக விளங்கும் சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சுதந்திர ஊடகங்களை அழித்துவிட்டு தற்போதைய அரசு சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் செல்கிறது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினாலேயே, பாராளுமன்றக் குழுக்களில் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான எதிர்க்கட்சியின் உரிமையை அரசு தடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here