இரு இளைஞர்களின் உயிரை பறித்த விபத்து

0
5

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று, கொழும்பு திசையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் லொறியில் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

ரதாவடுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here