நீர்கொழும்பு சம்பவம் : முன்கூட்டியே புலனாய்வு தகவல் கிடைத்திருந்ததா

0
10

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது பல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சிறைச்சாலைகள் ஆணையாளரும் கலந்துகொண்டிருந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு தேவையான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்ததா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

இருப்பினும், இதற்கு பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், இது தொடர்பாக தமக்கு எந்தவொரு புலனாய்வு தகவலும் முன்கூட்டியே கிடைக்கவில்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here