ஹோர்முஸ் நீரிணைப்பு முடக்கம்: பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு நீடித்த தாக்கம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை!

0
1

ஹோர்முஸ் நீரிணைப்பு மீண்டும் திறக்கப்படுவது எரிசக்தி சந்தைகளுக்கு உடனடி நிவாரணத்தை அளிக்கும் என்றாலும், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் உணவு மற்றும் எரிபொருள் செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என ஐநா வர்த்தக மற்றும் வளர்ச்சி அமைப்பு (UNCTAD) எச்சரித்துள்ளது.

இந்த மூலோபாய நீர்வழிப் பாதையூடான கப்பல் போக்குவரத்து, கடந்த பிப்ரவரி பிற்பகுதியில் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட போரினால் 100 நாட்களுக்கும் மேலாக முடங்கியது.

இதனால் பாதிக்கப்பட்ட விநியோகச் சங்கிலிகள் வழமைக்குத் திரும்ப அதிக காலம் எடுக்கும் என்பதால், எரிசக்தி சந்தைகளை விட உணவு மற்றும் போக்குவரத்து அமைப்புகள் மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என புதிய அறிக்கை கூறுகிறது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை (1/5) கொண்டு செல்லும் இந்த முக்கிய நீரிணைப்பு முடங்கியதால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here