காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதல்: சிறுமி உட்பட 8 பேர் பலி

0
2

காஸாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் அவசர சேவையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அல்-அக்ஸா மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன் கான் யூனிஸ் பகுதியில் கூடாரம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

மேலும் அல்-மாவாசி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 வயது இளம்பெண் மற்றும் அவரது ஒரு வயது மகள் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் காராமா நகரின் வடமேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 31 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here