பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

0
3

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவமழை காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல் மற்றும் சபரகமுவ,
மத்திய, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டதிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் மற்றும் குறிப்பாக கடற்தொழிலாளர்கள், இப்பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் அவசியமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here