ஜூன் 21 ஆம் திகதிக்குரிய உலக நீரியல் தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை தேசிய நீரியல் அலுவலகம் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த விரிவான நீரியல் அளவீட்டு களப் பயிற்சித் திட்டம், 2026 ஜூன் 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களில் திக்ஓவிட துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதற்கமைய, இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (சூரியவெவ), ருஹுணு பல்கலைக்கழகம், சமுத்திரப் பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம், ஊவா பல்கலைக்கழகம், CINEC Campus மற்றும் MSTI Maritime Academy ஆகியவற்றில் கல்வி பயிலும் நூற்றுப் பன்னிரண்டு (112) பட்டதாரிகள் கலந்துகொண்டனர். நவீன நீரியல் ஆய்வு உபகரணங்கள் குறித்த நடைமுறை அனுபவங்களையும், நேரடி கள ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ஊடாகவும், நீரியல் பற்றிய புரிதலையும் பாதுகாப்பான கடல்சார் சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவான அறிவைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் சந்தர்ப்பம் கிடைத்தது.



