ஜனாதிபதி அநுர பிரான்ஸ் விஜயம்! வெளியாகியுள்ள அறிவிப்பு

0
4

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரும் ஜூலை 16 ஆம் திகதி பிரான்சுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இலங்கைக்கு பிரெஞ்சு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த விஜயத்தின் முக்கிய அம்சமாக, உலகின் மிகப்பெரிய கடல்வழிப் போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனங்களில் ஒன்றான CMA CGM இன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரொடால்ப் சாடேவுக்கும் (Rodolphe Saadé) ஜனாதிபதி அநுரவுக்கும் இடையிலான சந்திப்பு அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here