செம்மணி மனித புதைகுழியில் செவ்வாய்க்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் புதிதாக என்புகூடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் 19 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அந்நிலையில் அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (23) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் யூலை 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி 09 நாட்கள் நடைபெற்ற முதலாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன.
அதனை அடுத்து இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு , செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற போது , முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 என்பு கூடுகள் உட்பட 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

