சாய்ந்தமருது:
சமூக சேவை என்பது வெறும் உதவிச் செயலல்ல, அது மனிதனை முழுமையான மனிதனாக உருவாக்கும் ஒரு உயர்ந்த பணியாகும் என்று இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப் பணி கற்கை இறுதியாண்டு மாணவர்களின் ‘First-Hand Social Work Intervention Camp 2026’ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வுரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
தலைமைத்துவத்திற்கான அடித்தளம்: பல்கலைக்கழகக் கல்வியின் பின்னர் தாம் எதிர்கொண்ட சவால்களையும், 1990களின் இறுதியில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பை உருவாக்கி நடத்திய போராட்டங்களுமே தனது இன்றைய அரசியல் மற்றும் தலைமைத்துவப் பயணத்திற்கு அடித்தளமாக அமைந்தன எனத் தனது இளமைக்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
-
சமூகப் பொறுப்புணர்வு: அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மட்டும் சமூக முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது. வீதியில் உள்ள தடையை அகற்றுவது, பிறருக்கு இடையூறு இல்லாமல் நடப்பது கூட சமூக சேவையே எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொருவரும் குடும்பம், கிராமம் மற்றும் சமூகத்தின் மீது பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என விளக்கினார்.
-
பிரதிபலனற்ற சேவை: சமூக சேவைக்கு இஸ்லாமிய போதனைகளிலும் முக்கிய இடமுண்டு எனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்காகச் செய்யப்படும் பணியே உண்மையான சேவை என்றார்.
-
அரசாங்கத்தின் திட்டங்கள்: அரசாங்கத்தின் “பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தின் ஊடாக வறுமை ஒழிப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டு, கிராம மட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூகப் பணி கற்கைகளைத் தொடரும் மாணவர்கள் தங்களை சமூக மாற்றத்தின் முன்னோடிகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், சமூக சேவையின் ஊடாகவே நிலையான மாற்றங்களையும் உண்மையான மனநிறைவையும் அடைய முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தனது உரையில் வலியுறுத்தினார்.