உலகையே அச்சுறுத்தி வரும் ‘H5N1’ ரகப் பறவைக் காய்ச்சல், இப்போது அவுஸ்திரேலியா கண்டத்திலும் முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்த அதிவேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்று, உலகின் அனைத்து கண்டங்களையும் சென்றடைந்துள்ளமை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை அவுஸ்திரேலியாவுக்குள் நுழையாமல் இருந்த ‘H5N1’ பறவைக் காய்ச்சல், தற்போது மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு புலம்பெயர்ந்த கடற்பறவையான ‘பிரவுன் ஸ்குவா’வில் (டீசழறn ளுமரய) கண்டறியப்பட்டுள்ளது.
பெர்த் நகருக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘கேப் லே கிராண்ட்’ தேசிய பூங்காவின் கடற்கரையில் இப்பறவை கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டின் வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியப் பெருங்கடலில் உள்ள அவுஸ்திரேலியாவின் தொலைதூரத் தீவுகளான ‘ஹேர்ட் மற்றும் மெக்டொனால்டு’ தீவுகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

