பிரித்தானியாவில் பெட்ஃபோர்ட் (Bedford) பகுதியில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ரயில் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் 89 பயணிகள் காயமடைந்துள்ளதாக பிரித்தானியபோக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5:15 மணியளவில், லண்டன் செயின்ட் பான்கிராஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு ‘ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ரயில்வே’ (EMR) ரயில்கள் இந்த விபத்தில் சிக்கின.
விபத்தின் தீவிரத்தை அடுத்து, அப்பகுதியில் பிரித்தானியா போக்குவரத்து போலீசார் ‘முக்கிய பேரிடர் வசரநிலையை’ (Major Incident) பிரகடனப்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கிழக்கு இங்கிலாந்து ஆம்புலன்ஸ் சேவை விரைந்து செயல்பட்டது.
காயமடைந்தவர்களில் 11 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், 22 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 56 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

