இலங்கை வந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் ஜெய் ஷா!

0
37

கொழும்பு:
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) தலைவரான ஜெய் ஷா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (19) இலங்கை வந்தடைந்துள்ளார்.

அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையிலான முதலாவது நேரடி விமான சேவை மூலம் அவர் நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் எதிர்காலக் கட்டமைப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விளையாட்டுத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ள ஜெய் ஷா, குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தற்போதைய இடைக்காலக் குழு நிர்வாகம் மற்றும் ஐசிசி-யின் விதமுறைகளுக்கு அமைவாக ஜனநாயகம் பேணப்படுவதை உறுதி செய்தல் போன்ற முக்கிய விடயங்கள் இந்தச் சந்திப்புகளில் முதன்மை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here