ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் தற்போதைய அரசாங்கத்தின் தலையீடுகள் எதுவும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை அரசாங்கமாகிய நாங்கள் செய்யவில்லை. அதனை விசாரணை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுமே சுயாதீனமாக மேற்கொண்டு வருகின்றன.கடந்த காலங்களைப் போலன்றி இந்த நிறுவனங்களை வலுப்படுத்தி அவற்றின் மீதான அரசியல் அழுத்தங்களை முற்றாக நீக்கி விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்கான சூழலையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதன் பலன் தற்போது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து நாடாளுமன்ற எனக்கு தனிப்பட்ட ரீதியில் எதுவும் தெரியாது. தன்னை கைது செய்ய வேண்டாம் எனக்கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தை நாடியுள்ளமையானது நாட்டின் சாதாரண பொதுமக்களுக்கும் அவர் மீது ஒரு பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
தாக்குதலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு நபர் ‘என்னை கைது செய்ய வேண்டாம்’ என்று நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அப்படியென்றால் இதில் ஏதோவொரு தொடர்பு இருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
திருடன் பிடிபடுவதற்கு முன்னர் அவசரமாக தப்பியோட முயல்வதைப் போன்ற ஒரு கிராமத்துப் பழமொழிக்கு அமைவான உதாரணமாகவே இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.
நாட்டில் சட்டத்தை முறையாக நிலைநாட்டுவதற்காகவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது .எனவே விசாரணை நிறுவனங்களை பலப்படுத்தி அரசியல் தலையீடற்ற பின்னணியை உருவாக்கி அதிகாரிகள் அச்சமின்றி கடமையாற்றுவதற்கான முழுமையான ஆதரவையும் பலத்தையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் தற்போதைய அரசாங்கத்தின் தலையீடுகள் எதுவும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார்.