டிரம்ப் பயணத்துக்கு பின் புதின் சீனா விஜயம் – உலக அரசியலில் புதிய பரபரப்பு

0
30

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது 3 நாள் சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சில மணி நேரங்களிலேயே, ரஷிய ஜனாதிபதி புதினும் அடுத்த வாரம் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம் ளின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலக நாடுகளின் கண்கள் அனைத்தும் தற்போது ஆசிய கண்டத்தின் மீது திரும்பியுள்ள சூழலில், வரும் 19 மற்றும் 20ம் திகதிகளில் ரஷிய ஜனாதிபதி புதின் சீனாவில் தங்கி பல்வேறு உயர்மட்ட ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார்.

டிரம்ப், கடந்த 13ம் திகதி சீனா சென்று ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசிவிட்டு வாஷிங்டன் திரும்பினார். வல்லரசு நாடுக ளுக்கு இடையே பனிப்போர் நிலவி வரும் வேளையில், டிரம்ப் புறப்பட்ட உடனே புதினும் சீனாவுக்கு விரைவது சர்வதேச அரங்கில் பெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001-ல் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க சீன-ரஷிய கூட்டாண்மை ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழா வையொட்டி புதின் இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார். டிரம்ப் உடனான சந்திப்பில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே என்னென்ன ரகசியங்கள் பேசப்பட்டன என்பது குறித்தும், அமெரிக்காவின் தற்போதைய நகர்வுகள் குறித்தும் ஷி ஜின்பிங்கிடம் புதின் விரிவாகக் கேட்டறிய உள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 2 நாள் பயணத்தின்போது புதினும், ஷி ஜின்பிங்கும் உக்ரைன் போர் நிலைமை, ஈரான் விவகாரம் மற்றும் உலகளாவிய பிராந்தியப் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்க உள்ளனர். பயணத்தின் இறுதியில் இரு நாடுகளும் இணைந்து ஒரு முக்கிய கூட்டுப் பிரகடனத்திலும், வர்த்தக ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளதால். அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் இந்த சந்திப்பை மிகுந்த உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here