சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர்

0
23

சீனா பிரதமரின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீஃப் மே 23 முதல் 26 ஆம் திகதி வரை அதிகாரப்பூர்வ பயணமாக சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என சீன வெளியுறவு அமைச்சகம் இன்று (21) அறிவித்துள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பாகிஸ்தான் பிரதமர் சீன அதிபர் மற்றும் சீனப் பிரதமருடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் திட்டம் தொடர்பான விடயங்கள் குறித்து இந்த சந்திப்புகளில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here