ஜனநாயக வழியிலேயே SLPP மீண்டும் எழுச்சி பெறும் – சாகர கரியவசம்

0
28

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வன்முறை அல்லது மக்களை அச்சுறுத்தும் அரசியலின் மூலம் ஒருபோதும் ஆட்சிக்கு வரவில்லை என சாகர கரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் ஜனநாயக வழிமுறைகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்ட கருத்துகளில், முதற்கட்டமாக பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களால் கட்சியிலிருந்து விலகிச் சென்ற ஆதரவாளர்களை மீண்டும் ஒன்றிணைப்பதே நோக்கமாக இருப்பதாக தெரிவித்தார்.

இரண்டாவது கட்டமாக, தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் தவறான நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மூன்றாவது கட்டத்தில், நாட்டின் அறிஞர்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள எதிர்காலத் திட்டங்களை மக்களிடம் முன்வைத்து, அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என சாகர கரியவசம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here