மகுடம் சூடுகிறதா ‘விசில்’? – விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

0
41

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எதிர்பாராத திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலையில் உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, மொத்தம் 234 தொகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த முன்னிலை அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முற்பகல் 11 மணியளவில் கிடைத்த தகவலின்படி, விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேவேளை, அதிமுக 71 இடங்களிலும், ஸ்டாலின் தலைமையிலான திமுக 56 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லம் முன்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விஜய் இல்லத்திற்குச் செல்லும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here