அநுராதபுரத்தில் சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 போதை மாத்திரைகளுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸாருடன் இணைந்து மாத்தளை சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளுடன் அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

